ஆங்கில புத்தாண்டையொட்டி, முருகனை தரிசிக்க திருச்செந்தூர் படையெடுக்கும் பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நேற்று இரவு முதலே திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

Update: 2023-12-31 08:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதால், பல ஊர்களில் மாலை அணிந்து விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துகொண்டிருக்கின்றனர். இதனால், கடந்த மூன்று நாட்களாக அதிக அளவில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

நாளை ஆங்கில புத்தாண்டையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து பூஜைகளும் நடைபெற உள்ளன.

ஆங்கில புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நேற்று இரவு முதலே திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்