பர்லியார் அரசு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கியது

பர்லியார் அரசு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கியது.

Update: 2022-07-05 12:15 GMT

குன்னூர்

பர்லியார் அரசு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது

துரியன் பழம்

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் பா்லியாரில் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இந்த பண்ணை தமிழக அரசின் தோட்டக்கலை துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த பண்ணையில், மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழம், பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், ரம்புட்டான் போன்ற பழ மரங்கள் உள்ளன. அரசு பழப் பண்ணையில் குழந்தை பாக்கியம் தருவதாக கூறப்படும் சுமார் 35 துரியன் பழமரங்கள் உள்ளன.

தற்போது இந்த மரங்களில் துரியன் பழங்கள் காய்க்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பழங்கள் அதிகளவில் மகசூல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலம் விட முடிவு

இதுகுறித்து பண்ணை நிர்வாகிகள் கூறியதாவது:- பா்லியாரில் துரியன் பழன சீசன் தொடங்கி விட்டது. தற்போது காய்கள் அனைத்தும் காய்த்து பழுக்க தொடங்கிவிட்டன. இந்த பழத்தை உண்பதன் முலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க கூடிய மருத்துவ குணம் கொண்டதாக கூறுவதால் ஆண்டுதோறும் விற்பனை அதிகரிக்கிறது.

இங்குள்ள 35 மரங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஜூன், ஜூலை மாதங்களில் காய்க்கத் தொடங்கும். இந்த பழம் பழுத்து மரத்திலிருந்து தானாக கீழே விழும். அவற்றை சேகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பழங்களை விற்பனை செய்ய ஏலம் விடப்படுகிறது. வரும் வாரங்களில் ஏலம் விட முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்