பாலாற்றில் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்
பாலாற்றில் மணல் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பாலாற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மினி டிப்பர் லாரியில் சிலர் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் அந்த மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஒடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.