உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
போடிப்பட்டி
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மாரியம்மன்
உடுமலையின் மையப்பகுதியில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் புரியும் அன்னை மாரியம்மனின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி ேநான்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டனர். கடந்த 4-ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
மேலும் கத்தி போட்டு வழிபாடு, அலகு குத்தி வழிபாடு, பறவைக் காவடி வழிபாடு, கண் மலர் சாத்தி வழிபாடு என பலவிதங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக வழிபாடுகளை மேற்கொண்னர். தினசரி இரவு காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம், மயில் உள்ளிட்ட வாகனங்களில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேேராட்டம்
இந்தநிலையில் தேரோட்டம் நிகழ்ச்சிக்காக பழமையான பழைய தேருக்குப் பதிலாக எண்கோண வடிவிலான புதிய தேருக்கு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. காலை 6.30 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அப்போது. ஏராளமான பக்தர்கள் தேரைத் தொட்டு வணங்கி காணிக்கைகளை செலுத்தினர். மாலையில் கோவில் வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள், மண்டகப்படிதாரர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளின் உபயதாரர்கள் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். மாலை 4.15 மணியளவில் தேரோட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.
தேரோட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி சண்முக சுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி என்ற சுப்பிரமணியம், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.பக்தர்கள் தேரை வடம் பிடித்து முன்னால் இழுத்துச் செல்ல குஷ்மா என்ற யானை பின்னே தள்ளிச் சென்றது.
பாரம்பரிய கலைகள்
தேரோடும் வீதிகளில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் காலை முதலே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். வெப்பத்தைத் தணிக்கும் வகையில் வலம் வந்த மாரியம்மனைக் குளிர்விக்க வழி நெடுகிலும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டது. தேருக்கு முன்னாள் பெண்கள் முளைப்பாரி எடுத்துச்சென்றனர். மேலும் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு, வாள் வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டுகளை நிகழ்த்தினார்.
சிறுவர்கள் புலி வேஷம், கரடி வேஷம் கட்டி பல்வேறு சாகசங்கள் நிகழ்த்திக் காட்டினர். பொள்ளாச்சி சாலை, தளி சாலை, வடக்கு குட்டை வீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் பொள்ளாச்சி சாலை வழியாக மாரியம்மன் கோவில் தேர்நிலையை வந்தடைந்தது. உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.