நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
ெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்ைக எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இதற்கிடையே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.
இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் இன்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் அனுமதி அளித்தனர். ஆனால் திடீர் அறிவிப்பால் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.