சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு பாதிப்பு

வாணியம்பாடியில் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-24 18:53 GMT

வாணியம்பாடி கச்சேரி சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலையிலிருந்து சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு தாமதமாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஈஷா என்பவர் கை குழந்தையுடன் வந்திருந்தார், அவர் பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெற்று இருந்தார். சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாளை வாருங்கள் என சொல்லியதாக தெரிகிறது. அதே நேரத்தில் 3 மணிக்கு கொடுக்கவேண்டிய பத்திரத்தை மாலை 4 மணியை கடந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சார் பதிவாளர் யாகியாகானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சார்பதிவாளரை வடிவேல் என்பவர் அடிக்க கை ஓங்கியதால் ஊழியர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு செய்ய வந்த ஈஷா அவருடைய குடும்பத்தினர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்