நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால்பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

Update: 2023-05-10 20:29 GMT

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, பவானிசாகர் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீலகிரி மலைப்பகுதியும், மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இந்தநிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1,056 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 83.11 அடியாக இருந்தது.

நேற்று மாலை 6 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2,607 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் 83.32 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப்பகுதிக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்