மழை இல்லாததால்கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது

மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது.

Update: 2023-02-21 18:45 GMT

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்