போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படும் சாலைகள் மற்றும் போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார். கடைத்தெரு 4 சாலை சந்திப்பில் உள்ள புறக்காவல் நிலையத்தில் மாலை நேரத்தில் போலீஸ்காரர் ஒருவரை பணியில் ஈடுபடுத்தும்படியும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.