குடிபோதையில்ஓட்டல் காவலாளியை தாக்கிய 2 பேர் கைது

பெருந்துறையில் குடிபோதையில் ஓட்டல் காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-24 21:07 GMT

பெருந்துறை

பெருந்துறையில் குடிபோதையில் ஓட்டல் காவலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர், பெருந்துறையில் காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று முருகேசன் தான் வேலை செய்யும் ஓட்டல் முன்பு உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை எட்டி உதைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முருகேசன் தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருந்துறை மேக்கூர் முதலியார் வீதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சந்தோஷ் (27), பெருந்துறை பஸ் நிலையம் அருகே உள்ள எண்ணவண்ணான் காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் வினோத் (22) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த வழக்கில் தொடர்புடைய பெருந்துறை சிலேட்டர் நகரை சேர்ந்த தீக்க்ஷன் என்பவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்