மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மதுபோதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள தோட்டவாரம் பாலதோப்புவிளையை சேர்ந்தவர் சேம்ராஜ் (வயது 38), செங்கல்சூளை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி மது குடித்து விட்டு ேபாதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். அப்போது இரவில் தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் சாலையோரம் சேம்ராஜ் விழுந்து கிடப்பதை கண்டு வீட்டுக்கு அழைத்துச் வந்தனர். மறுநாள் சேம்ராஜூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சேம்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.