அரசு பஸ்சில் மயங்கிய டிரைவர்

குன்னூர்-மஞ்சூர் இடையே அரசு பஸ்சில் மயங்கிய டிரைவர், சாமர்த்தியமாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2023-09-04 22:00 GMT

ஊட்டி

குன்னூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு கீழ்குந்தா கிராமத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சை கீழ்குந்தாவை சேர்ந்த சிவா (வயது 48) என்பவர் ஓட்டினார். குன்னூர்-மஞ்சூர் சாலையில் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, சிவாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து பயணிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக டிரைவர் மயங்கியது தெரியவந்தது. அந்த நிலையிலும் அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பயணிகள் அந்த வழியாக வந்த மாற்று பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்