முருங்கைக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை

தஞ்சை உழவர் சந்தையில் நேற்று முருங்கைக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-10-12 20:09 GMT

தஞ்சை உழவர் சந்தையில் நேற்று முருங்கைக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உழவர் சந்தை

தஞ்சை உழவர் சந்தை நாஞ்சிக்கோட்டை சாலை மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், வேங்கராயன் குடிகாடு, மருங்குளம், கொல்லாங்கரை, பொன்னாவரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தினசரி தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் முருங்கைக்காய் கடந்த வாரம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மற்ற காய்கறிகள்...

ஆனால் மற்ற காய்கறிகள் விலை குறைந்து காணப்பட்டது. அதன் விவரம் வருமாறு கத்தரிக்காய் கிலோ ரூ.24-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.32-க்கும் விற்பனையானது. அதேபோல அவரைக்காய் கிலோ- ரூ.54, புடலங்காய்-ரூ.28, பாகற்காய்-ரூ.44, தக்காளி- ரூ.42, பீன்ஸ்- ரூ.46, கேரட் ரூ.54-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்