கைதான ரவுடி கும்பல் தலைவனிடம் போதைப்பொருள், அரிவாள் பறிமுதல்

கைதான ரவுடி கும்பல் தலைவனிடம் போதைப்பொருள், அரிவாள் பறிமுதல்

Update: 2023-06-28 19:00 GMT

கோவை

கோவையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கும்பல் தலைவனிடம் இருந்து போதை பொருள், அரிவாள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கியால் சுட்டு கொலை

மதுரையை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 31). இவர் தனது மனைவியுடன் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது கோவை மற்றும் மதுரை போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராஜா, காஜா உசேன், ஆல்வின், சபூல்கான், சஞ்சய் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட தில்ஜித் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது பல்வேறு நிலுக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார்.

கைது

இந்த நிலையில் ரவுடி கும்பல் தலைவனாக செயல்பட்ட தில்ஜித் கோவை சாய்பாபாகாலனியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் சிக்காமல் அவர் தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் அவரின் 2 கால்களும் பலத்த காயமடைந்தது. அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரவுடி கும்பல் தலைவன் தில்ஜித் வைத்திருந்த ஒரு பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் அதிக போதை தரும் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. மேலும் ஒரு கத்தி, ஒரு அரிவாள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். போலீசாரிடம் சிக்காமல் 10 ஆண்டுகளாக தலைமறைவாக வசித்த தில்ஜித்திற்கு யார் யார் ? உதவி செய்தது, அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் யார்?, அவரை அடிக்கடி சந்தித்து பேசிய நபர்கள், போதைப்பொருளை யாருக்காக விற்பனை செய்ய கொண்டு வந்தார், அவருக்கு வழங்கிய யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்