போதைப் பொருள் புழக்கம்- பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னையில் பா.ஜ.க. சார்பில் வரும் 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
கோவை,
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ,
மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பா.ஜ.க. தான். தமிழ்நாட்டில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பா.ஜ.க. களம் இறங்கியுள்ளது.அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு. 2026 முக்கியமான தேர்தல்.
தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி என்பது கேள்விக்குறி. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரி சென்னையில் பா.ஜ.க. சார்பில் வரும் 12-ம் தேதி மதியம் 3.30 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் வழக்கு மீது யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை கண்டுபிடித்து மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதை என்சிபி செய்ய வேண்டும். என தெரிவித்தார்.