மருந்து கடையில் திருட்டு

கள்ளக்குறிச்சியில் மருந்து கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-16 18:45 GMT

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் மருந்துகடை உள்ளது. இங்கு வேலை பார்த்துவரும் வெற்றிச்செல்வன் என்பவர் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மருந்து கடை திறந்து இருந்ததால், அதனை நோட்டமிட்ட மோகூர் கிராமத்தை சேர்ந்த கவியரசன் (வயது 19) என்பவர் அங்கு புகுந்து ரூ.10 ஆயிரத்து 600-ஐ திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்