போதை ெபாருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

போதை ெபாருட்கள் விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 18:29 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி-நூருல்லாபேட்டை பகுதியில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது கருணாகரன் (வயது 58) என்பவரது கடையில் குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கடையில் இருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கருணாகரனை கைது செய்தனர்.

மேலும் கடைக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்