போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வாசுதேவநல்லூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-08-11 16:14 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளி சார்பில் நேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி கமிட்டி தலைவர் கு.தவமணி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து தலைவி லாவண்யா ராமேஸ்வரன் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், மாரியப்பன், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் மோகனமாரியம்மாள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை எடுத்து கூறினார்கள். இந்த விழிப்புணர்வு பேரணியானது காமராஜர் சிலை முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பள்ளியை அடைந்தது.


Tags:    

மேலும் செய்திகள்