வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-11 20:30 GMT

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தலைமை தாங்கி பேசினார். இதில், தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி கலந்துகொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்