திருவள்ளூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-27 10:42 GMT

இந்த விழிப்புணர்வு பேரணிக்கு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. டில்லிபாபு தலைமை தாங்கினார். திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்தனர்.

இந்த பேரணி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது. அதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பழக்கத்திலிருந்து எவ்வாறு மீளுவது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் மூலம் நடத்தி தத்துவமாக நடித்து காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், கோபி, ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்