போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்
கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் கிராமத்தில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
கொள்ளிடம்:
சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பில் ஆயங்குடி பள்ளம் கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஆனைக்காரன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், கண்ணன், ஆசிரியர் ஜான்ரஷீத், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், உடற்கல்வி இயக்குனர் பழனிவேல், ஆயங்குடி பள்ளம் மேல்நிலைப்பள்ளி மற்றும் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆயங்குடி பள்ளம் கிராமத்திலிருந்து புறப்பட்டு தைக் கால் கிராமம் வழியே கொள்ளிடம் சோதனை சாவடியில் நிறைவு பெற்றது.