போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
காட்பாடியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காட்பாடியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், ஆதர்ஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் பள்ளியில் இருந்து தொடங்கி காட்பாடி உழவர் சந்தை வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.