போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2023-04-28 18:51 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகம் சார்பில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமை தாங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்