அரூர் அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஆற்றில் மூழ்கி பலி-போலீசார் விசாரணை

Update: 2022-11-30 18:45 GMT

அரூர்:

தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வன்னியர் சங்க தலைவர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பையர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 48). இவர் தர்மபுரி கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்தநிலையில் வடிவேல் கோவில் திருவிழாவின் போது இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்த அரூருக்கு நேற்று சென்றார்.

பின்னர் கீழ் செங்கம்பாடி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் ஆற்றில் குதித்து வடிவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வடிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்