விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்-நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை

Update: 2023-01-24 18:35 GMT

பனைக்குளம்

ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்சை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தினால் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து குறைவான காரணத்தினால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையை நம்பியே சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் கருகி ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த ஆண்டினை வறட்சி ஆண்டாக அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து உரிய வறட்சி நிவாரண தொகை இழப்பீட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பயிர் காப்பீட்டு தொகையை தாமதம் இன்றி விரைவாக வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்