தனியார் பஸ்மோதி முதியவர் பலியான வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

தனியார் பஸ்மோதி முதியவர் பலியான வழக்கில் டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-10-18 18:45 GMT

திருச்சி புத்தூர் பாரதிநகர் 4-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி காலை திருச்சி-சென்னை பைபாஸ்ரோட்டில் சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி பஸ் டிரைவர் திருச்சி மாவட்டம் முசிறி மங்களம் பகுதியை சேர்ந்த மணிவேல் (வயது 69) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜராகினார். இந்த வழக்கில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், "குற்றம்சாட்டப்பட்ட மணிவேலுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும்" விதித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்