வடபொன்பரப்பி அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி டிரைவர் பலி

வடபொன்பரப்பி அருகே நெல் அறுவடை எந்திரம் மோதி டிரைவர் உயிாிழந்தாா்.

Update: 2023-03-30 18:45 GMT

வடபொன்பரப்பி, 

மூங்கில்துறைப்பட்டு பழையூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ் (வயது 29). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று மாலை பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார்.

வடபொன்பரப்பி அடுத்த புதூர் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த நெல் அறுவடை எந்திரம் ஒன்று, ரமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்