மினி பஸ்- ஆட்டோ மோதியதில் டிரைவர் படுகாயம்
மினி பஸ்- ஆட்டோ மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலமஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 39). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சள்மேட்டில் விட்டு விட்டு மீண்டும் காட்டுப்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பெரியநாச்சிப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (25) என்பவர் ஓட்டி வந்த மினி பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியராஜை அப்பகுதியினர் மீட்டு தொட்டியம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.