திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் வெட்டிக்கொலை

திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 02:33 GMT

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த மேலகனக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் கண்ணனை வழிமறித்து அவரது தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கும், மேலகனக்கம்பட்டு பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அதனால் கண்ணனின் மனைவி அந்த பெண்ணிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலியின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்