சிவகாசி,
விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் சமுத்திரக்கனி (வயது 47). இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் மனைவியுடன் தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 ஆண்டுகளாக தனது தம்பி ஜெயக்குமார் வசித்து வரும் சாத்தூர் மேலப்புதூரில் வசித்து வந்தார். டிரைவர் வேலை செய்து வந்த இவர் குடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் கிடைக்கும் இடத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சமுத்திரக்கனி சாத்தூர் கிருஷ்ணன் கோவில் சந்திப்பு பகுதியில் உள்ள வைப்பாறு பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சமுத்திரக்கனியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.