டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
மணவாளக்குறிச்சியில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சியில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மணவாளக்குறிச்சி ஆண்டார்விளையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது47). ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஒப்பந்த டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாண்டிவிளை பொன்னாவிளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மனைவி விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் வீட்டில் உள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.