அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள். ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் கணவன்-மனைவி அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாண்டியம்மாள் கணவரைப் பிரிந்து பல வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.