மதுரையில் டிரைவர் தற்கொலை

மதுரையில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-09-06 21:31 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மேலபெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒச்சப்பத்தேவர் மகன் பாலமுருகன் (வயது 46). டிரைவர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விக்கிரமங்கலம் அருகே வையத்தான் பிரிவில் பாலமுருகன், விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலமுருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பாலமுருகனுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்