போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-13 13:20 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நல்லான்பிள்ளைபெற்றான் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 23), டிரைவர்.

இவருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சிறுமி திருவண்ணாமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

பின்னர் சிறுமியும், தினகரனும் காதலித்து வந்துள்ளனர். தினகரன் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது

. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தினகரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்