மாயமான டிரைவர் பிணமாக மீட்பு

பேரிகை அருகே மாயமான டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-16 18:45 GMT

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகம் பக்கமுள்ள முக்காலபள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் நாகேஷ் (35), பிக்கப் வேன் டிரைவர். இவரது மனைவி முனிலட்சுமி (28). கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நாகேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து முனிலட்சுமி கடந்த 11-ந் தேதி பேரிகை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேசை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அத்திமுகத்தில் உள்ள ஒரு தாபா ஓட்டல் பின்புறம் நாகேசின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்