கிளை சிறைக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
அரக்கோணம் கிளை சிறைக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.
அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் அரக்கோணம் கிளை சிறைச் சாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்தித்தை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாரதிதாசனிடம் வழங்கினர். முன்னதாக கும்பினிபேட்டை இருளர் பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் இருளர் இன மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர் பிரபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் கே.பி.கே.பிரபாகரன், சாண்டி பத்மநாபன், பிரதீப், ஹரிகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.