15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்:கூடலூர் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும் என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கூடலூர் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மொத்தம் 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
மேலும் நகராட்சியில் நடைபெறும் கட்டுமானப்பணிகளை அடிக்கடி அதிகாரிகள் பார்வையிட வேண்டும். 16-வது வார்டு தண்ணீர்தொட்டி பகுதியில் தினந்தோறும் குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்புக்கார தெருவில் கழிவுநீர் வடிகால் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
கன்னிகாளிபுரம் பகுதியில் பள்ளிக்கு அருகே உள்ள தரைபாலத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர் கூறினார். கூட்டத்தில் சுகாதார அலுவலர் விவேக், மேலாளர் ஜெயந்தி, வருவாய் அலுவலர் அய்யப்பசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.