பெரம்பலூரில் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து
பெரம்பலூர் நகர் பகுதியில் இன்று முதல் 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
பெரம்பலூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தாளக்குடி கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந்தேதி வரை 4 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் ராமர் தெரிவித்துள்ளார்.