குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-10-03 11:43 GMT

குடிமங்கலம்

குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ஒன்றிய குழு கூட்டம்

குடிமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் சுகந்திமுரளி தலைமையில் நடந்தது. ஆணையாளர் சிவகுருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாதிக்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு போதிய அளவு குடிநீர்கிடைப்பதில்லை. எனவே திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் போதிய அளவுகுடிநீர் கிடைக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

பள்ளி கட்டிடம் புதுப்பித்தல்

குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பநகரம், ஆமந்தக்கடவு, கொண்டம்பட்டி, கொசம்வம்பாளையம், மூங்கில்தொழுவு, பெரியபட்டி, பூளவாடி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், விருகல்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கரூ ரூ.23 லட்சத்து 93 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அடிவள்ளிமுரளி, ராஜமாணிக்கம், தமயந்திமாசிலாமணி, முருகன், செல்வராஜ், கல்யாணி, திவ்யா, கவிதா, விஜயலட்சுமி, முருகானந்தம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்