பொதுமக்களுக்கு குடிநீர் வசதி
பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
களக்காடு அருகே தெற்கு மீனவன்குளம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ஆழ்குழாய் கிணறு, மின்மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு தெற்கு மற்றும் மத்திய வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அலெக்ஸ், காளப்பெருமாள், களக்காடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பானு, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராணி, சைமன், ஸ்ரீதேவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.