குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் ஆய்வு

குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-28 18:45 GMT

அரியலூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். பின்னர் திருமழப்பாடியில் உள்ள குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீர் ஏற்று நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மழைக்காலங்களில் மின்சாரம் தடைபட்டால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. ஜெனரேட்டர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் ஜே.ஜே.எம். திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள மறு சீரமைப்பு பணிகளுக்கான இடங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தலைமை பொறியாளர் முரளி, மேற்பார்வை பொறியாளர் மாதவன், நிர்வாக பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராஜேந்திரன் உள்பட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்