பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் சாலை விரிவாக்க பணி:ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் 4 நாட்கள் நிறுத்தம்

Update: 2023-03-10 19:00 GMT

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பாலக்கோடு ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி- ராயக்கோட்டை இடையே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே மேற்கண்ட 4 நாட்களுக்கு உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தி கொள்ளுமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்