கிருஷ்ணகிரியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி

வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க கிருஷ்ணகிரியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

Update: 2022-11-02 18:45 GMT

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க, சாக்கடை கால்வாய்களை தூர்வாரி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரி நகராட்சியில் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி சேலம் சாலை, ஜக்கப்பன் நகர், பழைய சப்-ஜெயில் சாலை, பழையபேட்டை காந்தி சாலை, புதுப்பேட்டை மார்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூர்வாரினர். இந்த பணியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோன்று நகராட்சி துப்புரவு அலுவலர் ரமணச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் உதவியகுமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டனர். மேலும், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சாக்கடை கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கிரில் கம்பி வலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்