வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-07-14 17:58 GMT

வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அழகிரிதாசன், சுப்பிரமணி, தேன்மொழி, இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். மாவட்ட கழக காப்பாளர் சடகோபன், மாவட்ட தலைவர் அன்பரசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் திராவிடர் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்