திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 19:33 GMT

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வங்கி பணிகளில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து வட மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்