திராவிட வீராஸ்- திரிவேணி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்

தமிழ்நாடு கிரிக்கெட் லீக் இறுதிப்போட்டியில் திராவிட வீராஸ்- திரிவேணி வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

Update: 2022-11-12 19:30 GMT

சேலம் எருமாபாளையம் பகுதியில் எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதலாவது பிளேஆப் சுற்றில் திரிவேணி வாரியர்ஸ் அணியை தோற்கடித்து திராவிட வீராஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-வது பிளேஆப் போட்டியில் வசந்த் அன் கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் திரிவேணி அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த வசந்த் அன் கோ சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய திரிவேணி வாரியர்ஸ் அணி 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் திரிவேணி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் திராவிட வீராஸ் அணியுடன், திரிவேணி வாரியர்ஸ் அணி மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்