திராவிடத் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திராவிடத் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-11 10:40 GMT


திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 10 அப்பாவி ஆதிதிராவிடர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தொழிற்சங்க தலைவர் கலப்பிரர், பொருளாளர் தங்கவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்