திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-08-28 19:02 GMT

திருச்சி கீழ சிந்தாமணியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 26-ந்தேதி யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்