ரூ.3 ½ லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி
குத்தாலம் அருகே ரூ.3 ½ லட்சத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது. இதை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொத்தங்குடி தலைப்பு வாய்க்கால் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. பாலையூர் ஊராட்சி முதல் கொத்தங்குடி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உடைய இந்த வாய்க்கால் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பொக்லின் எந்திரம் மூலம் நடந்த தூர்வாரும் பணியினை குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தூர்வாரும் பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, கொத்தங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் ரகுநாதன்,குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.