வாய்க்கால் தூர்வாரும் பணி
வேதாரண்யத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளிகாடு, குமரன்காடு, காந்தி நகர், மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் பல ஆண்டுகளாக வாய்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வடிய சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக அரசிடம் இருந்து ரூ.50 லட்சம் நிதி பெற்றார். அதனைத்தொடர்ந்து வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த தூர்வாரும் பணி இன்னும் 3 வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.